152
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் பதவி ராஜித சேனாரட்னவிற்கு வழங்கப்படுவதனை வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாச எதிர்த்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு குழு, ராஜிதவிற்கு பிரதி தலைவர் பதவியொன்று வழங்கப்பட வேண்டுமென பரிந்துரை செய்துள்ளது. அமைச்சர் சாகல ரட்நாயக்க இந்த பரிந்துரையை முன்மொழிந்துள்ளார். ராஜித சேனாரட்னவும், சதுர சேனாரட்னவும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ள விருப்பம் வெளியிட்டுள்ளனர். எனினும், பிரதித் தலைவர் பதவி ராஜிதவிற்கு வழங்கப்படுவதனை சஜித் விரும்பவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
Spread the love