காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பா.ம.க. சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் அரசியல் கட்சிகள், விவசாயிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, பா.ம.க. சார்பில் தமிழகம், புதுச்சேரியில் இன்று முழுஅடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம், உத்திரமேரூர் மற்றும் மதுராந்தகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
முழு அடைப்பு போராட்டம் காரணமாக ஒரு சில பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று காலை முதலே பேருந்துகள் இயக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. மேலும் பா.ம.க. நடத்தும் முழு அடைப்பு போராட்டத்திற்கு தி.மு.க, த.மா.கா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆதரவு தெரிவித்துள்ளன.