குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நாடு பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதார பின்னடைவை தடுக்கும் நோக்கில் அரசாங்கம் அதிகளவில் பணத்தை அச்சிடுவதாகத் தெரிவித்துள்ளார்.
எனினும், இவ்வாறு பணத்தை அச்சிடுவதனால் பொருளாதாரத்தை கட்டியெழுப்பிவிட முடியாது எனவும் அது மேலும் பொருளாதார வீழ்ச்சி நோக்கியே நகரும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். உற்பத்தி பொருளாதாரத்தை நோக்கி நகர்வதன் மூலமே நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். எரிபொருள் விலை நிர்ணயம் தொடர்பில் விலைப்பொறிமுறைமை எதுவும் கிடையாது எனவும் இதனால், விரைவில் எரிபொருட்களின் விலைகள் உயர்த்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.