குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பின் பின்னர் இந்த நிலைமை உக்கிரமடைந்துள்ளது. நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பின் போது சுதந்திரக் கட்சியின் ஒரு தரப்பினர் ஆதரவாக வாக்களித்திருந்ததுடன், மற்றுமொரு தரப்பினர் எதிராக வாக்களித்திருந்தனர்.
அரசாங்கத்தை தொடர்ந்தும் அங்கம் வகிக்க வேண்டுமென ஒரு தரப்பினர் கோரி வரும் அதேவேளை, மற்றுமொரு தரப்பினர் அரசாங்கத்தை விட்டு வெளியேற வேண்டுமென கோரி வருகின்றனர். நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது எதிராக வாக்களித்த மற்றும் வாக்களிப்பில் பங்கேற்காத சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் தொடர்ந்தும் இணைந்திருக்கவே விரும்புவதாகத் தெரிவிக்கப்படுகிறது.