குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சி மத்திய கல்லூரி வளாகத்தில் இயங்கி வருகின்ற வலயக் கல்வித்திணைக்களத்திற்குரிய கணிணி வள நிலையத்திற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் ஜோன் குயின்ரஸ் கடந்த வாரம் அதிரடியாக சீல் வைத்துள்ளார . இரவு நேரங்களில் லயன்ஸ் கழகத்தின் கூட்டங்களுக்கும், தேவைகளுக்கும் மற்றும் தனிப்பட்ட தேவைகளுக்கும் பயன்படுத்தப்பட்டு வந்தமையினால் வலயக் கல்விப்பணிப்பாளரால் சீல் வைக்கப்பட்டுள்ளது.
குறித்த கணிணி வள நிலையம் தற்போது முழுமையான செயற்பாடுகள் இல்லாதிருக்கின்ற நிலையில் மாதாந்தம் மின்சார கட்டணம் மற்றும் இணைய இணணைப்பு (டொங்குள்) கட்டணம் என்பன வலயக் கல்வித் திணைக்களமே செலுத்தி வருகிறது. இந்த நிலையில் குறித்த கணிணி வள நிலையத்தை அதற்கு பொறுப்பாக உள்ள ஒருவர் அதனை மாலை மற்றும் இரவு நேரங்களில் வேறு தோவைகளுக்கு பயன்படுத்தி வந்துள்ளளதாக கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் ஜோன் குயின்ரஸின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அவர் கடந்த வாரம் குறித்த கணிணி வள நிலையத்திற்கு சீல் வைத்துள்ளார். அத்தோடு இணைந்து கிளிநொச்சி மத்திய கல்லூரியில் இயங்கி வருகின்ற அக்கராயன் ஆசிரிய வள மத்திய நிலையமும் மூடப்பட்டு இரண்டு நாட்களின் பின்னர் திறக்கப்பட்டது. ஆனால் தொடர்ந்தும் கணிணி வள மத்திய நிலையம் சீல் வைக்கப்பட்டே உள்ளது.