506
இயற்கை விவசாயம் மற்றும் நம்மூர் விவசாயம் சம்பந்தமான தகவல்கள் அடங்கிய “விவசாயி” எனும் மாதாந்த சஞ்சிகையின் வெளியீட்டுவிழா எதிர்வரும் 13 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முற்பகல் 9.30 மணிக்கு யாழ். பொது நூலக கேட்போர் கூடத்தில் சஞ்சிகை ஆசிரியர் சி.அனுராஜ் தலைமையில் இடம்பெறவுள்ளது.
‘நஞ்சில்லா உணவு நாளைய சந்ததிக்கு’ எனும் மகுடவாக்கியத்துடன் விவசாயம், விலங்கு வேளாண்மை, மீன்பிடி மற்றும் உள்ளூர் உற்பத்திகள் ஆகியவற்றுடன் தமிழரின் மரபுசார் வாழ்க்கைமுறை தொடர்பான விவசாய விற்பனர்கள், சாதாரண விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரின் ஆக்கங்களுடன் சஞ்சிகையாக மாதாந்தம் வெளிவர இருக்கிறது ‘விவசாயி’
நிகழ்வில் மருத்துவர் பார்வையில் இயற்கை விவசாயமும் சுகநலனும் என்ற தொனிப்பொருளில் வைத்தியக்கலாநிதி சி.சிவன்சுதனும் சூழலியல் பார்வையில் சூழலியலும் விவசாயம் என்ற தொனிப்பொருளில் வடக்கு மாகாண சபையின் முன்னாள் விவசாய அமைச்சரும், சூழலியலாளருமான பொ.ஐங்கரநேசனும், கல்வியியலாளனின் பார்வையில் விவசாயம் என்ற தொனிப்பொருளில் யாழ். பல்கலைக்கழக உயர்பட்டப் படிப்புகள் பீடாதிபதியும், விவசாய பேராசிரியருமாகிய கலாநிதி கு.மிகுந்தன், நிர்வாக அதிகாரியின் பார்வையில் விவசாயம் என்ற தொனிப்பொருளில் யாழ். மாநகர சபை ஆணையாளர் த. ஜெயசீலனும், பொருளியற் பார்வையில் விவசாயம் என்ற தொனிப்பொருளில் வங்கியியலாளர் எஸ். சுந்தரேஸ்வரனும், சட்டவாளரின் பார்வையில் விவசாயம் என்ற தொனிப்பொருளில் சட்டத்தரணி சுகாஸ் கனகரட்ணமும், சமூக சேவையாளனின் பார்வையில் விவசாயம் என்ற தொனிப்பொருளில் வலிகாமம் தெற்கு மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் அ.ஜெபநேசனும் சிறப்புரையாற்றவிருக்கின்றனர்.
Spread the love