Home இலங்கை மகாவலி ‘எல்’ வலயத்திலே ‘மாயா புரம்’ என்ற சிங்கள குடியேற்ற திட்டத்தை ஏற்படுத்துவதற்கு அரசு முயற்சி-

மகாவலி ‘எல்’ வலயத்திலே ‘மாயா புரம்’ என்ற சிங்கள குடியேற்ற திட்டத்தை ஏற்படுத்துவதற்கு அரசு முயற்சி-

by admin

வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் குற்றச்சாட்டு…

வடக்கு-கிழக்கு மாகாணங்களிலே சிங்கள அரசின் திட்டமிட்ட குடியேற்றங்களில் ஒரு பகுதியாக மகாவலி ‘எல்’ வலயத்தின் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை தெற்கில் இருந்து கொண்டு வரப்படுகின்ற சிங்கள மக்களுக்கு கொடுத்து ‘மாயா புரம்’ என்ற குடியேற்ற திட்டத்தை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அதனை நாங்கள் வன்மையாக கண்டிப்பதாகவும் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்  தெரிவித்துள்ளார்.

-மன்னாரில் வைத்து நேற்று   ஊடகங்களுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே தெரிவித்தார்.

இந்த  குடியேற்ற திட்டத்தின் மூலம்  கடந்த காலங்களில் அமைச்சர்களினால் தொடர்ச்சியாக பகிர்ந்தளிக்கப்பட்ட நிலங்களும்   மீன் பிடி தொழிலை மேற்கொண்டு வரும் தமிழ் தொழிலாளர்களுக்கு  மறுக்கப்பட்ட    இடங்களிலும் சிங்கள தொழிலாளர்களுக்கு கடல் தொழில் செய்வதற்கான   அனுமதியினை தவறான முறையிலும்,மோசடியான முறையிலும் கொடுத்துள்ளமையினால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டிருந்தது.

இந்த நிலையில் வடமாகாண சபையின் உறுப்பினர்கள்,வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் அங்கு சென்றோம். இந்த நிலைமைகளை உடனடியாக அரசாங்கம் முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.இத்திட்டங்களை உடன் கைவிட வேண்டும் என்ற கோரிக்கையை ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ஊடாக குறித்த கோரிக்கையை மகஜர் ஊடாக  அனுப்பி வைத்துள்ளோம்.

இவ்விடையம் தொடர்பாக நாம் கூடி அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ள இருக்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார். -இப்பிரச்சினைகளை அரசு கைவிடும் வரை நாங்கள் ஓயப்போவதில்லை.தொடர்ந்தும் அரசாங்கம் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுமாக இருந்தால் தேசிய நல்லிணக்கத்தினையோ அல்லது வேறு எதனையும் ஏற்படுத்த முடியாது.

 

அரசியல் அமைப்பிற்கு முறனாகவும் பகிர்ந்தளிக்கப்பட்ட மாகாண சபை சட்டத்திற்கு எதிராக அரசங்காம் செயற்படுகின்றது என்பதனை நாங்கள் பகிரங்கமாக தெரிவித்துக்கொள்ளுகின்றோம்.என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் மேலும் தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More