குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவிக்கு மேலதிகமாக மேலதிக பொதுச் செயலாளர்கள் மூன்று பேர் நியமிக்கப்பட வேண்டும் என கட்சியின் மறுசீரமைப்புக்காக நியமிக்கப்பட்டுள்ள குழு பரிந்துரைத்துள்ளது.
பொதுச் செயலாளர் பதவிக்கு மேலதிகமாக ஊடக செயலாளர், பிரசார செயலாளர், தொழிற்சங்க செயலாளர் போன்ற பதவிகளை ஏற்படுத்தி அதற்கான அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 19 ஆம் திகதி கூடவுள்ள ஐக்கிய தேசியக்கட்சியின் ஆலோசனைகுழு கட்சியின் பதவிகள் குறித்து இறுதி தீர்மானத்தை எடுக்க உள்ளது. பொதுச் செயலாளர், பொருளாளர் மற்றும் தேசிய அமைப்பாளர் பதவிகளுக்கு நியமிக்கப்பட வேண்டியவர்கள் குறிதது இதன் போது கலந்துரையாடப்பட உள்ளது.