மியான்மாரில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், 10 ரோஹிங்யா முஸ்லிம்கள் கொல்லப்பட்டமை தொடர்பாக ராணுவத்தினர் 7 பேருக்கு தலா 10 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மியான்மாரின் ராக்கின் மாகாணத்தில் ரோஹிங்யா முஸ்லிம் கிளர்ச்சியாளர்கள் கடந்த ஆண்டு காவல்துறையியனர் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, அங்குள்ள ரோஹிங்யா இனத்தவர் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது.
ரோஹிங்யா முஸ்லிம் மக்களின் கிராமங்களுக்கு தீ வைக்கப்பட்டநிலையில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். அத்துடன் 6½ லட்சத்துக்கும் அதிகமானோர் அகதிகளாக பங்களாதேசுக்கு புலம் பெயர்ந்து சென்றுள்ளனர்.
இந்த தாக்குதல்களின்போது கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், 10 ரோஹிங்யா முஸ்லிம்கள் கொல்லப்பட்டு, ஒரே புதைகுழியில் புதைக்கப்பட்டனர். மேற்கொண்டதில் 4 ராணுவ அதிகாரிகள் மற்றும் 3 வீரர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இது தொடர்பாக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது, இதையடுத்து அவர்களுக்கு தலா 10 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன் அவர்கள் அனைவரும் ராணுவத்தில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர்.