பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த அமைச்சர்கள் பதவி விலகிய பின்னர், ஏற்படும் வெற்றிடத்திற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள் என அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமைச்சரவையில் இந்த மாற்றங்கள் இன்று அல்லது நாளை நடைபெறும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளதுடன் அப்போது வெற்றிடமாகும் அமைச்சு பதவிகள் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினருக்கு வழங்கப்பட உள்ளது. அங்கஜன் ராமநாதன் மற்றும் காதர் மஸ்தான் ஆகியோருக்கு பிரதியமைச்சர் அல்லது ராஜாங்க அமைச்சர்கள் பதவிகள் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பில் கலந்துக்கொள்ளாத ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 26 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டு வருகின்றனர். இவர்களில் சிலர் நேற்று இரவு ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தியுள்ளனர்.