ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் வரிசையில் அமர்ந்த பின்னர், நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் பதவி மற்றும் எதிர்க்கட்சியின் அமைப்பாளர் பதவி என்பன ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு கிடைக்கும் என தெரியவருகிறது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் 54 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சியாக செயற்பட்டு வருகின்றனர். மேலும் 16 பேர் அவர்களுடன் இணைவதன் மூலம் இந்த எண்ணிக்கை 70 ஆக அதிகரிக்கும்.
இதனடிப்படையில், நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் 96 உறுப்பினர்களில் பெரும்பான்மையான உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் அங்கம் வகிப்பர். இந்த நிலையில், தற்போது எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகிக்கும் இரா. சம்பந்தன் மற்றும் எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோர் தமது பதவிகளை இழக்க நேரிடும் என தெரிவிக்கப்படுகிறது.