குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க இன்றைய தினம் அமைச்சுப் பதவியொன்றை கோரி நிற்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இன்றைய தினம் அல்லது நாளைய தினம் அநேகமாக புதிய அமைச்சரவை நியமிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற நிலையில் பரிந்துரைக்கப்பட்ட அமைச்சர்களை நியமிப்பது குறித்த பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தநிலையில் புதிய அமைச்சரவையில் தமக்கு பதவியொன்றை வழங்குமாறு ரவி கருணாநாயக்க கோரி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அமைச்சரவையில் விரைவில் மாற்றம் செய்யப்பட உள்ள நிலையில் அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது