175
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சிலாபம், முந்தல் கரியன்கள்ளி பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் இருவர் காயமடைந்து சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் இருந்து பனாகொடை நோக்கி சென்றுக்கொண்டிருந்த இராணுவ ட்ரக் வண்டியுடன் சிலாபத்தில் இருந்து புத்தளம் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி என்பன மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இராணுவ ட்ரக் வண்டியை அதன் சாரதியால் கட்டுப்படுத்த முடியாது, மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி மீது மோதியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Spread the love