160
சோமாலியாவில் கால்பந்து மைதானத்தில் தீவிரவாதிகள் மேற்கொண்ட வெடிகுண்டு தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர். சோமாலியாவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள பராவே நகரில் அமைந்துள்ள கால்பந்து மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்தக் குண்டுத்தாக்குதலுக்கு அல் ஷபாப் இயக்கம் பொறுப்பேற்றுள்ளது
அல் ஷபாப் தீவிரவாதிகள் அங்கு பாதுகாப்பு மற்றும் அமைதியை நிலநாட்டும் பணியில் ஈடுபட்டிருக்கும் கென்யா, ஜிபோட்டி, உகாண்டா, எத்தியோப்பியா நாடுகளை சேர்ந்த ஆபிரிக்க ஒன்றியத்தினைச் சேர்ந்த கூட்டுப்படையினரை குறிவைத்தும் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
Spread the love