குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
இலங்கை நாடாளுமன்றத்தின் தற்போதைய கூட்டத்தொடரை இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த நள்ளிரவு முதல் ஒத்திவைத்துள்ளார். தற்பொது உருவாகியிருக்கும் அரசியல் நெருக்கடி காரணமாகவே அவர் நாடாளுமன்றத்தை ஒத்திவைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது குறித்து ஜனாதிபதியின் செயலரினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றின்படி, மே மாதம் 8ஆம் திகதி வரை நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் காலகட்டத்தில் நாடாளூமன்றத்தில் பிரேரணைகளையோ அல்லது கேள்விகளையோ சமர்ப்பிக்க முடியாது.
இதேவேளை, தற்காலிகமாக 4 பதில் அமைச்சர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். நம்பிக்கையில்லா தீர்மான பிரேரணை தோற்கடிக்கப்பட்டதை அடுத்து பதவி விலகிய ஜனாதிபதியின் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் 6 பேருக்கு பதிலாகவே இந்த 4 புதிய அமைச்சர்கள் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி முன்னதாக அறிவித்த முழுமையான அமைச்சரவை மாற்றம் தமிழ் – சிங்கள புத்தாண்டுக்கு பின்னரே நடக்கும் என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.