இந்துக்களின் உணர்வினை புண்படுத்தியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாகிஸ்தானின் உள்துறை அமைச்சகத்துக்கு அந்நாட்டு நாடாளுமன்ற சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்
முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கானை இந்துக் கடவுளான சிவபெருமானாக சித்தரிக்கும் படம் ஒன்று வெளியானது. இந்தப் படம் சமூக வலைத்தளங்களில் தீவிரமாக உலா வந்ததால், அது இந்து மக்களின் உணர்வினை புண்படுத்துவதாக அமைந்திருந்ததுடன் சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது.
இம்ரான்கானை இந்து கடவுளாக சித்தரித்து வெளியான படம், இந்து மக்களின் உணர்வினை புண்படுத்துகிறது எனவும் இத்தகைய குற்றங்கள் இணையதள பாதுகாப்பு சட்டத்தின் வரம்புக்குள் வருகிறது என்பதனால் சம்மந்தப்பட்டவர்களை தண்டிக்காமல் விட்டு விடக்கூஎன பாகிஸ்தான் மக்கள் கட்சியின் இந்து நாடாளுமன்ற உறுப்பினராக ரமேஷ் லால் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக விசாரணைக்கும் உத்தரவிட வேண்டும் என அவர் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார். இந்தநிலையில் இந்த விவகாரத்தில் சபாநாயகர் சர்தார் அயஸ் சாதிக் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளர்h. இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் ஒரு வார காலத்தில் விசாரணை நடத்தி முடிக்குமாறு, அந்த துறையின் ராஜாங்க அமைச்சருக்கு சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார் இந்த சம்பவத்தில், குற்றவாளிகள்மீது வழக்கு பதிவு செய்யுமாறு மத்திய புலனாய்வு முகாமைக்கும் அவர் உத்தரவு பிறப்பித்தார்.