பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பான அரசியல் சாசன வழக்கில், அவர் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதித்து அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பனாமா லீக்ஸ் விவகாரத்தில் ஷெரீப்பை குற்றவாளி என கடந்த வருடம் அந்நாட்டு உச்சநீதிமன்றம் அவரை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டடிருந்தது
இதனை அடுத்து, பதவிவிலயிருந்த அவர் மேன்முறையீடு செய்திருந்தார். இந்தநிலையில் தகுதி நீக்க வழக்கில் நவாஸ் ஷெரீப் தேர்தலில் போட்டியிட நிரந்தர தடையா என்பது குறித்து குழப்பம் காணப்பட்டது. இந்நிலையில், நவாஸ் ஷெரீப் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை என இன்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது