மக்கள் கலை இலக்கியக் கழகத்தைச் சேர்ந்த புரட்சிகர பாடகர் கோவன் பிணையில் விடுவிக்கப்பட்டள்ளார். இந்தியப் பிரதமரையும் தமிழக முதல்வரையும் பற்றி அவதூறாகப் பாடல் பாடியதாக திருச்சி காவல்துறை இன்று அவரை கைதுசெய்து இருந்தது. ம.க.இ.கவின் மாநில செயற்குழு உறுப்பினர் கோவன் திருச்சியில் வசித்துவருகிறார். கடந்த மாதம் திருச்சி தலைமை தபால் நிலையம் முன்பு ரத யாத்திரையை கண்டித்து கோவன் உள்ளிட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது ரத யாத்திரையையும் பிரதமரையும் விமர்சித்து கோவன் பேசியதாக காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர் மீது, தன்னுடைய பாடல்களின் மூலம் வன்முறையை தூண்டியதாக இந்திய தண்டனைச் சட்டத்தின் 153A, 504, 505 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டது. இன்று கே.கே. நகர் காவல் நிலையத்தைச் சேர்ந்த ஆய்வாளர் மற்றும் காவலர்கள் கோவனைக் கைதுசெய்தனர். இதன் பின் ஜேஎம் நீதிமன்றத்தில் நீதிபதி கிருபாகரன் முன்பாக ஆஜர்படுத்தப்பட்டபோது, தன் மீது போடப்பட்ட வழக்குகள் சரியானவையல்ல எனக் குறிப்பிட்ட கோவன், தனது பாடலை பாடிக் காண்பித்தார். இதையடுத்து அவருக்கு நிபந்தனை பிணை வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
புரட்சிகரப் பாடகர் கோவன் திருச்சியில் வீட்டு பூட்டு உடைத்து கைது….
புரட்சிகரப் பாடகர் கோவன் திருச்சியில் கைதுசெய்யப்பட்டுள்ளார். மக்கள் கலை இலக்கிய கழகத்தை சேர்ந்த பாடகர் கோவன் மக்களுக்கு எதிரான அரசின் நடவடிக்கைகளை, பாடல் வடிவில் வீதிகளில் இறங்கி மக்கள் மத்தியில் பாடி வருபவர். இவர் பிரதமர், மற்றும் முதல்வரை விமர்சித்து பாடல் பாடியதாக குற்றம்சாட்டி திருச்சி பொலிசார் கோவனை கைது செய்துள்ளனர். மக்கள் கலை இலக்கிய கழகத்தை சேர்ந்த நாட்டுப்புறக் கலைஞர், பாடகர், சமூகச் செயற்பாட்டாளர் என பன்முக செயற்காட்டாளரான கோவன். நாட்டுப் பாடல்கள் பாடுவதில் அதிக ஆர்வம் கொண்டவர். அரசின் அடக்குமுறைகளை கண்டித்து, பாடல் வடிவில் மக்களிடையு விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் கோவன், மக்கள் கலை இலக்கியக் கழகத்துடன் இணைந்து இதனை கோவன் செய்து வருகிறார்.
விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் ரதயாத்திரை,
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் கோவன் பாடல் பாடியுள்ளார். பிரதமர், முதல்வரை விமர்சிக்கும் விதமாக பாடல் பாடியதாகக் கூறி கோவனை திருச்சி காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.
சிவில் உடையில், தனியார் வாகனத்தில் சென்ற காவற்துறையினர் கோவனின் வீட்டு பூட்டை உடைத்து, மக்களின் பாரிய எதிர்ப்புகளிடைடேயே கைது செய்துள்ளனர்.
முழு மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி ஜெயலலிதா முதல்வராக இருந்த போது மூடு டாஸ்மாக்கை மூடு என்று பாடியதற்காக கடந்த 2015ம் ஆண்டு கோவன் தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.