குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் பணிகளின் மூலமாக இலங்கை 161 மில்லியன் டொலர் வருமானம் ஈட்டியுள்ளது. கடந்த 2004ம் ஆண்டு முதல் இதுவரையில் இலங்கை இராணுவத்தினர் வெளிநாடுகளில் மேற்கொண்ட அமைதி காக்கும் பணிகளின் மூலம் இவ்வாறு வருமானம் ஈட்டியுள்ளனர். இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இலங்கை இராணுவத்தினர் அமைதி காக்கும் பணிகளின் மூலம் மாதாந்தம் குறைந்தபட்சம் 2.5 மில்லியன் டொலர்களை வருமானமாக ஈட்டுகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.அமைதி காக்கும் பணிகளின் ஊடாக இலங்கைக்கு பாரியளவு வெளிநாட்டு வருமானம் கிடைக்கப் பெறுவதாகத் தெரிவித்துள்ளார்.