ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நாடாளுமன்றத்தைக் கலைக்கும் எண்ணம் இல்லை என ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்ரின் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.
கடந்த வியாழக்கிழமை நள்ளிரவு முதல் மே 8ஆம் திகதி வரை நாடாளுமன்றத்தை முடக்கும் வர்த்தமானி அறிவிப்பு ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட நிலையில் இது குறித்து பிபிசி சிங்கள சேவைக்கு கருத்து வெளியிட்ட போதே ஒஸ்ரின் பெர்னான்டோ இவ்வாறு தெரிவித்துள்ளார்.
1978ஆம் ஆண்டு அரசியலமைப்பின் 70 (3) பிரிவு நாடாளுமன்றத்தை முடக்கி விட்டு, கலைப்பதற்கான அதிகாரத்தை ஜனாதிபதிக்கு வழங்கியுள்ள போதும் அவ்வாறான நோக்கம் ஜனாதிபதிக்கு இல்லை என அவர் தெரிவித்துள்ளார். இதற்கு முன்னரும் பல தடவைகள் நாடாளுமன்றம் முடக்கப்பட்டுள்ளது என்பதனையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்