Home இலங்கை விடுவிக்கப்பட்ட வலி. வடக்­கும் உள்ளிருக்கும் 3 இரா­ணுவ முகாம்­களும்..

விடுவிக்கப்பட்ட வலி. வடக்­கும் உள்ளிருக்கும் 3 இரா­ணுவ முகாம்­களும்..

by admin

 

வலி. வடக்­கில் இராணுவத்தினரால் நேற்று விடுவிக்கப்பட்ட பிர­தே­சத்­துக்­குள் 3 இரா­ணுவ முகாம்­கள் அகற்­றப்­ப­டா­மல் இன்­ன­மும் காணப்படுவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.  683 ஏக்­கா்­கள் விடு­விக்­கப்­பட்­டுள்­ள­ தாக அறி­விக்­கப்­பட்­ட­போ­தும் இவ்­வாறு இரா­ணுவ முகாம்­கள் இயங்­கு­வ­தால் உண்­மை­யி­லேயே குறிப்­பிட்ட எண்­ணிக்­கை­யான ஏக்­கர் காணி­கள்­தான் விடு­விக்­கப்­பட்­ட­னவா என்னும் சந்­தே­கத்­தை­யும் அவர்­கள் எழுப்பியுள்ளனர்

மேலும் 150 மீற்­றா் நோ்வழிப் பாதை முட்க்­கம்­பி­களால் அடைக்­கப்­பட்­டு அதற்குப் பதி­லாக தனி­யாரின் காணி­க­ளி­னூ­டாக மாற்­றுப் பாதை உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது.

அந்தப்பகுதியின் முக்கிய பாதையே இவ்­வாறு தடுக்­கப்­பட்­டு அத­னுள் இரா­ணு­வ­மு­காம் இருப்­ப­தா­க­வும் இது தொடர்­பாக மாவட்­டச்­செ­ய­லா், பிர­தேச செய­லா், தவிசாளர் ஆகி­யோ­ரி­டம் முறையிட்டுள்ளதாகவும் மக்­கள் தெரிவித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More