சிரியா மீது அமெரிக்கா இன்று நடத்திய ஏவுகணை தாக்குதல் தொடர்பாக விவாதிப்பதற்காக ரஷியாவின் அழைப்பின் பேரில் ஐ.நா. பாதுகாப்பு சபை இன்று அவசரமாக கூடுகிறது. ஐக்கிய நாடுகள் சபையால் தடை செய்யப்பட்ட ரசாயன ஆயுதங்களை சிரியா அரசு பயன்படுத்தி அப்பாவி மக்களை கொன்றமை தொடர்பாக விவாதிக்க ஐ.நா. பாதுகாப்பு சபையின் அவசர கூட்டம் கடந்த 10-ம் திகதி நடைபெற்றது.
சர்வதேச ரசாயன ஆயுத தடுப்பு முகமையை சேர்ந்த அதிகாரிகள் சிரியாவின் டூமா நகருக்கு நேரில் சென்று இவ்விவகாரம் தொடர்பாக ஆய்வு நடத்த வேண்டும் என்னும் தீர்மானத்தை ஐ.நா. பாதுகாப்பு சபையில் ரஷியா முன்வைத்தது. எனினும் ரஷியாவின் தீர்மானத்துக்கு ஆதரவாக ஏழு வாக்குகள் மட்டுமே கிடைத்ததால் ரஷியாவின் இந்த தீர்மானம் தோல்வி அடைந்தது.
இந்தநிலையில் சிரியாவின் மீது அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் விமானப்படைகள் இன்று காலை அடுத்தடுத்து ஏவுகணைகள வீசி தாக்குல் நடத்தின. இந்நிலையில், இந்த தாக்குதல் தொடர்பாக விவாதிப்பதற்காக ஐ.நா. பாதுகாப்பு சபையை அவசரமாக கூட்டுமாறு ரஷியா கேட்டுக் கொண்டது. இதையடுத்து இன்று அவசரமாக கூடுகிறது. இந்த கூட்டத்தில் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்ரனினியோ குட்டரெஸ் உரையாற்றவுள்ளதாக ஐ.நா. தலைமயகம் தெரிவித்துள்ளது.
அதேவேளை சிரியாவில் திட்டமிட்டபடி துல்லியமாகவும் கச்சிதமாகவும் ஏவுகணை தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அதற்கு துணைபுரிந்த பிரித்தானியா பிரான்ஸ் நாட்டு ராணுவத்துக்கு டிரம்ப் நன்றி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது