150
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சட்டவிரோதமான முறையில் சிகரட்டுக்களை நாட்டுக்குள் கொண்டு வர முயற்சித்த சீனப் பிரஜை ஒருவரை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய அதிகாரிகள் கைது செய்துள்ளனர். குறித்த சீனப் பிரஜையிடமிருந்து மீட்கப்பட்ட சிகரட்டுக்களின் மொத்த சந்தைப் பெறுமதி சுமார் 1.4 மில்லியன் ரூபா என்பது குறிப்பிடத்தக்கது.
44 வயதான சீனப் பிரஜை சிங்கப்பூரிலிருந்து இலங்கைக்கு வந்த போது, மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது சிகரட்டுக்கள் மீட்கப்பட்டுள்ளன. இதேவேளை, கடந்த வியாழக்கிழமையும் 2.2 மில்லியன் ரூபா பெறுமதியான சட்டவிரோத சிகரட்டுக்கள் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love