166
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
நல்லாட்சி அரசாங்கத்துடன் உடன்படிக்கை செய்து எந்த பயனும் இல்லை ஏனெனில் அரசாங்கத்தில் கௌதம புத்தர்களோ மகாத்மாகாந்திகளோ இல்லை என அமைச்சர் மனோகணேசன் தெரிவித்தார்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் ,
பலமான தமிழ் கட்சி உருவாகுவதை ஐக்கிய தேசிய கட்சி விரும்பவில்லை.
ஜனாதிபதியின் கீழ் உள்ள தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சை என் அமைச்சின் கீழ் தருவதாக அண்மையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி கூறியிருந்தார்.
அப்போது தலையிட்ட அமைச்சர் மங்கள சமரவீர அந்த அமைச்சு துறையை ஐனாதிபதியே வைத்திருப்பது நல்லது என கூறியிருந்தார். மேலும் சர்வதேசத்தின் கவனத்தினை அது கொண்டிருக்கிறது. எனவும் கூறினார். பின்னர் நான் அமைச்சர் மங்களவுட ன் பேசும்போது கூறினேன் சர்வதேசத்தின் கவனத்தை கொண்டிருப்பது முக்கியமல்ல.
சர்வதேசத்திற்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவேண்டும் என. அவ்வாறு ஐக்கிய தேசிய கட்சி பலமான ஒரு தமிழ் கட்சி உருவாகுவதை ஜக்கிய தேசிய கட்சி விரும்புவதில்லை. அப்படியே ஒரு பலமான தமி ழ் கட்சி உருவானாலும் அந்த கட்சி தமக்கு சாதகமாக இருக்கவேண்டும் என நினைப்பார்கள் என்றார்.
சம்பந்தன் – சி.வி. மனம் விட்டு பேசவேண்டும்.
யாழ்.மாவட்டத்தின் பொருளாதாரத்தை முன்னர் தபால் கட்டளை பொருளாதாரம் எ ன கூறுவார்கள். ஆனால் இது இன்று உண்டியல் பொருளாதாரமாக மாறியுள்ளது. அந்த நிலை மாற்றப்படவேண்டும். அதற்காக இளைஞர்கள் மத்தியில் மன மாற்றம் உண் டாக வேண்டும்.
இங்குள்ள இளைஞர்களுடன் பேசியபோது அவர்களிடத்தில் எதிர்காலத்தின் மீது நம்பிக்கையற்ற தன்மை காணப்படுகின்றது. இந்த நிலையும் ஆபத்தான ஒன்றாகவே உ ள்ளது. யாழ்.மாவட்டத்தின் பொருளாதாரம் மீன்பிடி, விவசாயம் மற்றும் சுற்றுலா ஆகியவற்றை அடிப்படையாக கொண்டது.
ஆனால் அந்த துறைகள் இந்த மாவட்டத்தி ன் பொருளாதார மேம்பாட்டுக்காக சரியாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவில்லை. ஆக மொத்தத்தில் இந்த மாவட்டத்தில் சொல்லிக் கொள்ளும் அளவில் அபிவிருத்தி பணிகள் இடம்பெறவில்லை.
அபிவிருத்தியும் அரசியல் உரிமையும் நம் இரு கண்கள். அதனை எதற்காகவும் விட் டுக்கொடுக்கவியலாது. தமிழ் மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் மாகாண சபையையும், நாடாளுமன்ற உறுப்பினர்களையும் தேர்வு செய்தார்கள்.
ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. இரா.சம்பந்தனும், சீ.வி.விக்னேஷ்வரனும் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இருவரும் முதலில் மனம் விட்டுப்பேசவேண்டும். இந்த இருவரில் அவர் சரியானவர், இவர் பிழையானவர் என நான் கூறவரவில்லை.
இருவருமே மனம் விட்டுப்பேசி தமிழ் மக்களின் நலன்களுக்காக செயற்படவேண்டும். மேலும் தந்தை செல்வா போன்றவர்கள் அகிம்ஷை வழியில் போராடினார்கள் பின்னர் புலிகள் ஆயுத வழியில் போராடினார்கள் இப்போது சம்மந்தன் சர்வதேச ஆதரவுடன் போராடி வருகிறார்.
அதேசமயம் நான் தமிழ் மக்களின் அபிலாஷைகளை சிங்கள மக்களிடம் கொண்டு செல்கிறேன். இந்த அரசாங்கம் புலிகள் இருந்த காலத்தில் ஈழம் தவிர எல்லாம் தருகிறோம் என்றார்கள். இன்று எதுவும் தரமா ட்டோம் என்கிறார்கள். ஆகவேதான் நண்பன் ரவிராஜ் வழியில் இதனை நான் செய்கிறேன்.
அரசில் புத்தரும் இல்லை காந்தியும் இல்லை.
பிரதமருக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு தமிழ்தேசிய கூட்டமைப்பு உடன்படிக்கை எதனையாவது செய்துள்ளதா? என எனக்கு தெரியாது. ஆனால் இரு தரப்பிற்கும் இடையில் பேச்சிவார்த்தை நடந்தபோது அங்கு கூறப்பட்ட விடயங்களை நான் பார்த்தேன்.
அதில் புதிதாக ஒன்றையும் கூட்டமைப்பு கூறவில்லை. முன்னரே கூறி வந்த விடயங்களை ஞாபகப்படுத்தியிருந்தார்கள். மேலும் நாங்களும் உடன்படிக்கை எதனையும் செய்யவில்லை. அரசிடனான உடன்படிக்கைகளில் எமக்கு நம்பிக்கையில்லை. இது வரை எத்தனை உடன்படிக்கைகள் செய்ய ப்பட்டது? அவற்றுக்கு என்ன நடந்தது?
ஆகவே நாம் செய்யும் உடன்படிக்கைகளை நிறைவேற்ற அரசாங்கத்தில் கெளதம புத்தர்களோ, மகாத்மா காந்திகளோ இல்லை. எல்லாம் அரசியல் பேரம்தான் நடக்கிறது என்றார்.
Spread the love