தமக்கு தெரியாத இடங்களுக்கு நீராடச் செல்வதை தவிர்க்குமாறு காவல்துறையினர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளனர். கடந்த நாட்களில் நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் நீராடச் சென்று உயிரிழந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
கடந்த வருடம் இவ்வாறான 727 மரணங்கள் பதிவாகியிருந்த நிலையில் இந்த வருடத்தின் முதல் இரண்டு மாத காலப்பகுதிக்குள் 93 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் கவனக் குறைவு காரணமாகவே உயிரிழந்திருப்பதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். தற்போது நிலவும் காலநிலை காரணமாக நீராடிக் கொண்டிருக்கும் போது ஒரேயடியாக பெரியளவில் நீர் வழிந்தோடி வரலாம். உயிர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் உள்ள இடங்களில் மாத்திரம் நீராடுமாறு காவல்துறையினர் மக்களை கேட்டுள்ளனர்.