கிளிநொச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கைவிடப்பட்ட பராமரிப்புக்கள் இன்றிக் காணப்படுகின்ற காணிகள் மற்றும் வீடுகளால் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்வதாகபல்வேறு தரப்புக்களும் சுட்டிக்காட்டியுள்ளன.
கிளிநொச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பராமரிப்பின்றிக்காணப்படும் காணிகள் வீடுகளுக்கு அருகில் வாழ்வோர்பல்வேறு அசௌகரியங்களை எதிர் கொண்டு வருகின்றனர் .
குறிப்பாக மீள் குடியமர்விற்குப்பின்னர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கைவிடப்பட்ட அல்லது உரிமையாளர்களால் பராமரிக்கப்படாத காணிகள் வீடுகள் அதிகம் காணப்படுகின்றன.
இதனால் இவ்வாறு கைவிடப்பட்ட வீடுகள் ஆட்களற்றவீடுகள் பராமரப்பற்ற காணிகள் என்பவற்றில் பல்வேறு சட்டவிரோத செயற்பாடுகள் இடம் பெற்று வருகின்றன.
இதனைவிட டெங்கு நோய் பரவும் சூழல்கள் கானப்படுகின்றன. குறிப்பாக கரைச்சி கண்டாவளை பூநகரி பளை ஆகிய பகுதிகளில் மக்கள் குடியிருப்புக்கள் பாடசாலைகளுக்கு அருகில் பல காணிகள் பராமரிப்புக்கள் இன்றி பற்றைக்காடுகள் மண்டிக் காணப்படுகின்றன. இதனால் நுளம்புகளின் பெருக்கம் காணப்படுவதுடன் சூழலுக்கு பல்வேறு பாதிப்புக்கள் காணப்படுகின்;றன. இவ்வாறு பராமரிப்பின்றிக்காணப்;படும் காணிகளை துப்பரவு செய்யுமாறு அதன் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்துமாறு பல்வேறு தரப்புக்களும் கோரியுள்ளன