162
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
புத்தாண்டு தினமான கடந்த சனிக்கிழமை மாலை 6 மணி முதல், ஞாயிற்றுக்கிழம காலை 6 மணி வரையிலான 12 மணித்தியாலங்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 12 பேர் வரையில் உயிரிழந்துள்ளனர். இந்த காலப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 69 பேர் வரையில் காயமடைந்துள்ளனர்.
இவ்வாறு காயமடைந்தவர்களில் 22 பேர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும், 47 பேர் சிறு காயங்களுக்கு உட்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, புத்தாண்டு காலப் பகுதியில் குடிபோதையில் வாகனம் செலுத்திய 140 சாரதிகளை கைது செய்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்
Spread the love