நாட்டின் எதிர்க்கட்சித் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவர நினைப்பது புதுமையானதும், நாகரீகத்திற்கு புறம்பான செயற்பாடு எனவும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் சுட்டிக் காட்டியுள்ளார். எனினும் அவ்வாறானதொரு நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டவரப்படுமாயின், அதனை எதிர்கொள்ள தயாராகவே இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
திருகோணமலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர், நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவருவதற்கு எவருக்கும் உரிமை உண்டு என்கின்ற போதிலும், அவ்வாறான நடைமுறை உலக நாடுகளில் இடம்பெறுவதில்லையென அவர் தெரிவித்துள்ளார். நாட்டின் ஒரு சாராரின் நலனை மாத்திரம் கருத்திற்கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் செயற்படுவதாகவும், அரசாங்கத்திற்கு சார்பாக செயற்படுவதாகவும் தெரிவித்து, கூட்டு எதிர்கட்சி சம்பந்தனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவர முயற்சி செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
1 comment
எதிக்கட்சித் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்படுவது எமது நாட்டுக்குப் புதிதில்லை. சம்பந்தர் தனது தலைவர் அமிர்தலிங்கத்திற்கு நடந்ததைக் கூட மறந்து விட்டார்……. http://www.dailymirror.lk/article/TNA-s-key-role-in-defeating-no-confidence-motion-against-Ranil-148497.html