குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதியாக பதவி வகிப்பதற்கு தகுதியற்றவர் என அமெரிக்க புலனாய்வுப் பிரிவான எப்.பி.ஐ யின் முன்னாள் பணிப்பாளர் ஜேம்ஸ் கொமி (James Comey) தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டில் ஜனாதிபதி ட்ரம்ப், கொமியை பணி நீக்கம் செய்ததன் பின்னர், முதல் தடவையாக தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர் காணலில் கொமி, ட்ரம்ப் ஜனாதிபதியாக பதவி வகிக்கத் தகுதியற்றவர் என தெரிவித்துள்ளார்.
ட்ரம்ப் பல சந்தர்ப்பங்களில் பொய்யுரைப்பதாகவும் நீதிமன்ற விவகாரங்களில் தலையீடு செய்வதாகவும் கொமி குற்றம் சுமத்தியுள்ளார். மருத்துவ ரீதியாக ட்ரம்பிற்கு உடல் தகுதி காணப்பட்ட போதிலும் தார்மீக அடிப்படையில் ட்ரம்ப் ஜனாதிபதியாக பதவி வகிக்க தகுதியற்றவர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஜனாதிபதி நேர்மையாக இருக்கவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.