குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சிரிய இரசாயன ஆயுத தாக்குதல் நடத்தப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட பகுதியில் விசாரணை நடத்தம் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு செல்வதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. இரசாயன ஆயுத நிபுணர்கள் சிரியாவிற்கு சென்று சம்பவ இடத்தை நேரில் பார்வையிடுவதற்கு திட்டமிட்டிருந்த நிலையில் நிபுணர்கள் பார்வையிடுவதற்கு முன்னதாகவே அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகள் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாக ரஸ்யா சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, இந்த நிபுணர்கள் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் டூமா நகரிற்கு செல்வதனை ரஸ்யாவும் சிரியாவும் வேண்டுமென்றே தடுத்து வருவதாக மேற்குலக நாடுகள் குற்றம் சுமத்தியுள்ளன. சிரியாவும், ரஸ்யாவும் அதிகாரிகளுக்கு பாதுகாப்பு உத்தரவாதத்தினை இதுவரையில் வழங்காத காரணத்தினால் அதிகாரிகள் அந்த இடத்தைச் சென்றடைவதில் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.