குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
வடக்கு மாகாண ஆளுநராக மீளவும் நியமிக்கப்பட்டுள்ள றெஜினோல்ட் கூரே இன்றையதினம் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
மாகாண ஆளுநர் மாற்றத்தின் போது வடக்கு மாகாண ஆளநராக இருந்த றெஜினொல்ட் கூரேயையும் ஐனாதிபதி மாற்றியிருந்தார். இந்நிலையில் மீளவும் வடக்கு ஆளுநராக றெஜினோல்ட் கூரே நியமிக்கப்பட வேண்டுமென பல தரப்பினர்களும் ஐனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். இதற்கமை வடக்கு ஆளுநராக றெஜினோல்ட் கூரேயை ஐனாதிபதி மீளவும் நியமித்திருந்தார். இந்நிலையில் இன்றையதினம் யாழ் வந்த கூரேக்கு பலாலியில் மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டுருந்த்து.
அதனைத் தொடர்ந்து யாழ் மாவட்டச் செயலகம் முன்பாக அமைந்துள்ள மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு வந்த அவருக்கு மாலைகள் அணிவுத்தும் பொன்னாடைகள. போர்த்தியும் வரவேற்றகப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து மீளவும் வடக்கு மாகாண ஆளுநருக்கான தன்னுடைய கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார். இதன் போது வடக்கிலுள்ள பலரதும் வேட்டுகோளுக்கமையவே தான் மீளவும் இங்கு வத்துள்ளதாகவும் தான் இங்கு செய்ய வேண்டிய கடமைகள் நிறையவே இருப்பதாகவும் அவற்றை செய்வதற்றாக அத்தனை மநடவடிக்கைகளையும் தான் முன்னெடுக்க உள்ளதாகவும் கூறினார்.