குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
உலகில் எந்த நாட்டு இராணுவத்திற்கும் பிறப்பிக்காத உத்தரவை ஐக்கிய நாடுகள் அமைப்பு இலங்கை இராணுவத்திற்கு பிறப்பித்துள்ளது. அமைதிகாக்கும் பணிகளுக்காக இலங்கை இராணுவம் வெளிநாடுகளுக்கு செல்லும் போது, இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் அனுமதியை பெற வேண்டும் என்பதே அந்த உத்தரவாகும் எனவும் ஜெனிவா மனித உரிமை பேரவையின் தகவல்கள் இதனை தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஐ,நா அமைதிகாக்கும் பணிகளுக்கு வெளிநாடுகளுக்கு செல்லும் முன்னர் படையினர் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளனரா என்பதை கண்டறிய வேண்டும் என ஐக்கிய நாடுகள் அமைப்பு இலங்கைக்கு அறிவித்துள்ளது.
இறுதிக்கட்ட போருடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அமைதிகாக்கும் படையில் இணைக்கப்பட்டுள்ளதாக, ஐக்கிய நாடுகளின் முன்னாள் அதிகாரி யஷ்மின் சூகா மற்றும் புலம்பெயர் தமிழர் அமைப்புகள் மனித உரிமை ஆணைக்குழு மற்றும் ஐ,நா அமைதிகாக்கும் படையின் தலைமை அதிகாரி லேய்ரோய் ஆகியோரிடம் முறைப்பாடு செய்துள்ளமையே இந்த உத்தரவுக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
அமெரிக்கா உட்பட 8 நாடுகள் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்படுகின்ற போதிலும் அந்நாடுகளுக்கு இப்படியான உத்தரவுகள் பிறப்பிக்கப்படவில்லை எனக் பேசப்படுகிறது.