காஷ்மீரில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட விவகாரத்தினையடுத்து பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த 9 அமைச்சர்கள் பதவிவலகியுள்ளனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் கத்துவா பகுதியில் 8 வயது சிறுமி கடந்த ஜனவரி மாதம் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டிருந்தார். இந்த சம்பவம் தொடர்பான தடயங்களை மறைத்தும், அழித்தும் திசை திருப்பியதாக மூன்று காவல்துறையினர் உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற பேரணியில் மெஹ்பூபா முப்தி தலைமையிலான கூட்டணி அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள பா.ஜ.க.வை சேர்ந்த இரு அமைச்சர்கள் கலந்துகொண்டனர். இதற்கு எதிர்ப்புகள் கிளம்பியநிலையில் குறித்த இரு அமைச்சர்களும் பதவிவிலகியிருந்தனர்.
இந்நிலையில், ஜம்மு – காஷ்மீர் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அனைத்து பா.ஜ.க. அமைச்சர்களையும் உடனடியாக பதவிவிலகுமாறு பா.ஜ.க. மேலிடம் உத்தரவிட்டதன் பேரில், 9 அமைச்சர்கள் நேற்று பதவிவிலகியுள்ளனர்;.