குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
Children of Iraqi Kawliya group (known as Iraqi gypsies) attend a class at a school in al-Zuhoor village near the southern city of Diwaniya, Iraq April 16, 2018. Picture taken April 16, 2018. REUTERS/Alaa Al-Marjaniஈராக்கில் பதினான்கு ஆண்டுகளின் பின்னர் சிறுபான்மை சமூகமான கவ்லியாவைச் சேர்ந்த சிறுவர் சிறுமியர் பாடசாலைகளுக்கு செல்கின்றனர். கவ்லியா என்ற சிறுபான்மை இனத்தவர்கள் ஒடுக்கப்பட்ட குறவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஈராக்கின் அல் சூஹூரில் இந்த இன சமூகத்திற்கென ஓர் ஆரம்ப பாடசாலையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி அமரர் சதாம் ஹூசெய்ன் காலத்தில் இந்தப் பகுதியில் நிறுவப்பட்டிருந்த இந்தப் பாடசாலை ஈராக்கிய ஆயுததாரிகளினால் நிர்மூலமாக்கப்பட்டிருந்தது.
முகநூல் செயற்பாட்டாளர்களின் தீவிர பிரச்சாரம் மற்றும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஒத்துழைப்புடன் பாடசாலை மீளவும் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடசாலையில் 27 மாணவ மாணவியர் கல்வி கற்கின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.