அமெரிக்க மத்திய புலானாய்வுப்பிரிவின் இயக்குனர் மைக் பாம்பேயோ வட கொரிய ஜனாதிபதி கிம் ஜொன் உன்னுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பியாங்யாங்கிற்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங உன் ஆகியோhர் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான தயாரிப்புகள் குறித்த சந்திப்புகள் அண்மையில் நடைபெற்றுள்ள நிலையில் உயர் மட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக ஒப்புக் கொண்டிருந்த டிரம்ப் கிம் ஜாங் உன்னுடனான சந்திப்புக்கு ஐந்து இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இந்த பேச்சுவார்த்தை ஜூன் மாதம் அல்லது அதற்கு முன்னதாக நடைபெறும் எனவும் டிரம்ப் தெரிவித்திருந்தார். இதுவரை அமெரிக்க ஜனாதிபதிகள் எவரும் வட கொரிய ஜனாதிபதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது