இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் மணிக்கு 98 கிலோ மீற்றர் முதல் 100 கிலோ மீற்றர் வேகத்தில் வீசிய சூறாவளி காற்றில் சிக்கி 15 பேர் உயிரிழந்துள்ளதுடன் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது, நேற்று இரவு வீசிய இந்த சூறாவளி காற்று 45 நிமிட நேரம் வீசியதாகவும் இதனால் கட்டடம் இடிந்து விழுந்ததுடன் சுமார் 200 மரங்கள் வேரோடு சாய்ந்தததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கொல்கத்தாவில் 7 பேரும், ஹெரா மாவட்டத்தில் 6 பேரும், பங்குரா மற்றும் ஹூக்ளி மாவட்டங்களில் தலா ஒருவரும் உயிர் இழந்து உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூறாவளி காரணமாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டிருந்ததாகவும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீட்பு பணிகளை மேற்கொள்ள பேரிடர் மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது