273
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நாடாளுமன்ற ஒத்திவைக்கப்படுவது சம்பிரதாயம் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வு அவசியம் எனவும் இதனால், நாடாளுமன்றம் அவ்வப்போது ஒத்திவைக்கப்படுவதாகவும் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். கூட்டு எதிர்க்கட்சி கூறுவது போல் நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவரை மாற்ற முடியாது. எதிர்க்கட்சித் தலைவரை மாற்றும் அதிகாரம் சபாநாயகருக்கே உள்ளது.
மேலும் நாடாளுமன்றம் 5 ஆண்டுகளுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளது. எவருடைய கோரிக்கைக்காகவும் நாடாளுமன்றத்தை கலைக்க முடியாது எனவும் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.
Spread the love