குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அவுஸ்திரேலிய கிரிக்கட் அணியின் பயிற்றுவிப்பாளராக ஜஸ்டின் லாங்கர் (Justin Langer) தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதுவரை காலமும் தலைமை பயிற்றுவிப்பாளராக கடமையாற்றிய டெரன் லீமன் அண்மையில் தென் ஆபிரிக்காவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டித் தொடரின் போது ஏற்பட்ட கசப்பான சம்பவங்களைத் தொடர்ந்து பதவிவிலகியிருந்தார். பந்தை சேதப்படுத்தியதாக அவுஸ்திரேலிய அணி வீரர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இந்தநிலையில் 47 வயதான ஜஸ்டின் லாங்கர் அணியின் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட உள்ளார் என அவுஸ்திரேலிய கிரிக்கட் சபை அறிவித்துள்ளது. லாங்கர் மேற்கு அவுஸ்திரேலியா உள்ளிட்ட பிராந்திய அணிகளின் பயிற்றுவிப்பாளராக கடமையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.