குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தாய்வான் நீரினைப் பகுதியில் சீனா யுத்த பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதற்கு, தாய்வான் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. சீனாவின் இந்த இராணுவப் பயிற்சியானது பிராந்திய வலயத்தில் பதற்ற நிலைமை ஏற்படுத்தியுள்ளது. இந்த வார ஆரம்பத்தில் தாய்வான் இவ்வாறான ஓர் பயிற்சியை நடத்தியிருந்தது. சுயாட்சி அதிகாரங்களை கோரி வரும் தாய்வானின் யுத்த பயிற்சிகளுக்கு பதிலளிக்கும் வகையில் சீனா இவ்வாறு ஒருநாள் யுத்த பயிற்சியை மேற்கொண்டுள்ளது.
தாய்வானை அச்சுறுத்தும் நோக்கில் இந்த பயிற்சியை சீனா முன்னெடுத்துள்ளதாக தாய்வான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, நாட்டின் பௌதீக ஒருமைப்பாட்டை பாதுகாக்கும் நோக்கில் இந்த பயிற்சி நடத்தப்படுவதாக சீனா தெரிவித்துள்ளது.