163
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
துருக்கியில் முன்கூட்டியே ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. துருக்கியின் ஜனாதிபதி ரையிப் எர்டோகன் ( Tayyip Erdogan ) பொதுத் தேர்தல் தொடர்பில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். தேர்தல் நடத்தப்படுவதற்கு உத்தேசிக்கப்பட்ட திகதியை விடவும் ஓராண்டு முன்னதாகவே தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதன்படி, எதிர்வரும் ஜூன் மாதம் 24ம் திகதி தேர்தல் நடத்தப்பட உள்ளது.
நாட்டின் ஜனாதிபதி முறைமையில் அவசர மாற்றங்கள் செய்யப்பட வேண்டியிருப்பதாகவும் குறிப்பாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நாட்டுக்கு அவசியம் எனவும் ஜனாதிபதி ரையிப் எர்டோகன் தெரிவித்துள்ளார்.
Spread the love