Home இலங்கை இன ரீதியான பிளவுகள் நாட்டை ஒருபோதும் அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்லது – சபாநாயகர்

இன ரீதியான பிளவுகள் நாட்டை ஒருபோதும் அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்லது – சபாநாயகர்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..

இன ரீதியான பிளவுகள் நாட்டை ஒரு போதும் அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்லாது என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். இன பிளவுகள் நாட்டை சீர்குலைந்துவிடும் எனவும் இவ்வாறான நாட்டிற்கு எதிர்காலம் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தை பயன்படுத்திய நாடுகளே இன்று அபிவிருத்தி அடைந்துள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்ற வளாகக் கட்டடத் தொகுதியில் நடைபெற்ற நிகழ்வில் அவர் இதனைகத் தெரிவித்துள்ளார். கடந்த மாதத்தில் அம்பாறையிலும் அதனைத்தொடர்ந்து கண்டியிலும் ஏற்பட்ட துர்ப்பாக்கிய சம்வத்தினால் நாட்டுக்கும் எமது பொருளாதாரத்திற்கும் பெரும் பாதிப்பு உருவாக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதேபோன்று உலகின் மிகவும் கௌரவத்தை பெற்றிருந்த எமது நாட்டின் நற்பெயருக்கும் இதனால் பெரும் களங்கம் ஏற்பட்டது என்று சபாநாயகர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More