குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சிரியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஜெர்மனிய ஜிஹாதிய உறுப்பினரான ஹாய்டார் ஸாமாரை கைது செய்துள்ளதாக குர்திஸ் போராளிகள் அறிவித்துள்ளனர். 2001 செப்டம்பர் 11 தாக்குதல்தாரிகளுடன் ஸாமாருக்கு தொடர்பு உண்டு என குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
அமெரிக்க ஆதரவு சிரிய ஜனநாயகப் படைப் பிரிவின் கமான்டர் ஒருவர், ஸாமாரை கைது செய்துள்ளதாகவும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறெனினும் இந்த தகவலை உறுதி செய்ய முடியாது என அமெரிக்க ஆதரவு சர்வதேச கூட்டுப் படையினர் தெரிவித்துள்ளனர். ஸாமார் கைது செய்யப்பட்டமை குறித்து முதன் முதலாக ஜெர்மனிய பத்திரிகையொன்றில் செய்தி வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது