ஹொரணை இறப்பர் தொழிற்சாலையில் ஏற்பட்ட அசம்பாவிதத்தினைத் தொடர்ந்து குறித்த தொழிற்சாலையின் தொழில் நடவடிக்கைகளை தற்காலிகமாக இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறித்த தொழிற்சாலையில் விசாரணை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதன் காரணமாக இவ்வாறு தொழிற்சாலையின் செயற்பாடுகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.
குறித்த இறப்பர் தொழிற்சாலையில் நேற்று ஏற்பட்ட திடீர் அனர்த்தத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதுடன் பாதிகப்பட்ட 19 பேர் ஹொரண வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை, கைதுசெய்யப்பட்ட குறித்த இறப்பர் கைத்தொழிற்சாலையின் முகாமையாளரை எதிர்வரும் 25ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது