குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஜெர்மனியில் இரண்டாம் உலப் போரின் போது பயன்படுத்தப்பட்ட குண்டு ஒன்று செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது. ஜெர்மனியின் மத்திய பேர்ளின் பகுதியில் மீட்கப்பட்ட இந்த குண்டே இவ்வாறு செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது. குறித்த பகுதியை அண்டிய 10, 000 பேர் குறித்த பகுதியை விட்டு வெளியேற்றப்பட்டு இந்த குண்டு செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது.
பிரித்தானியாவினால் போடப்பட்ட குண்டு ஒன்றே இவ்வாறு செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது. துற்போது புகையிரத நிலையம் உள்ளிட்ட அண்டைய பகுதிகளின் இயல்பு நிலை வழமைக்குத் திரும்பியுள்ளது எனவும் 500 கிலோ கிராம் எடையுடைய குண்ட ஒன்று செயலிழக்கச் செய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.