143
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
அரசாங்கத்தில் இருந்து விலகும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சி வரிசையில் அமர தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கோரி, சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கடிதம் ஒன்றை கையளிக்க உள்ளதாக முன்னாள் ராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையெழுத்துடன் கடிதத்தை சபாநாயகரிடம் கையளிக்க உள்ளதாகவும் கடிதத்தில் கையெழுத்திடம் நடவடிக்கைகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
Spread the love