குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
“நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சியை முறையை எதிர்க்கிறேன் அது குறித்து பேசும் போது கவனமாக இருக்கிறேன்”
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சியை முறையை தான் எதிர்ப்பதாகவும் அது குறித்து பேசும் போது மிகவும் கவனமாக இருப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கண்டி கெட்டம்பே ராஜமஹா விகாரையின் விகாராதிபதி கெப்பட்டிவில சிறிவிமல தேரரை நேற்று சந்தித்த பின்னர் ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியை ஒழிக்க வேண்டும் என்று பந்துல குணவர்தன கூறியுள்ளதன் மூலம் அவருக்கு ஏதேனும் நோய் ஏற்பட்டு வருகிறதா என சிறிவிமல தேரர் என்னிடம் வினவினார். ஒவ்வொருவர் பல்வேறு முடிவுகளை எடுக்கும் போது நாடு அதளபாதாளத்திற்குள் செல்லும்.
கூட்டு எதிர்க்கட்சி என்பது ஒரு நிலைப்பாட்டை கொண்டவர்கள் இருக்கும் இடமல்ல. சிலர் வார்த்தைகளை வெளியிட்டு விட்டால், அனைவரையும் விமர்சிக்கின்றனர் என முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.