குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பினை உறுதி செய்யும் நோக்கில் விசேட அதிரடிப்படையினர் கடமையில் ஈடுபடுத்தப்படுவதாக காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். அண்மையில் மிரிஸ்ஸ பகுதியில் நெதர்லாந்து சுற்றுலாப் பயணிகள் மீது உள்நாட்டவர்கள் தாக்குதல் மேற்கொண்ட சம்பவத்தை தொடர்ந்து இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மிரிஸ்ஸ பகுதியில் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்காக இவ்வாறு விசேட அதிரடிப்படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். தற்காலிக அடிப்படையில் இவ்வாறு விசேட அதிரடிப்படையினரை கடமையில் ஈடுபடுத்தி நிலைமைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தாக்குதலை நேரில் கண்டவர்கள் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனவும் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர கோரிக்கை விடுத்துள்ளார்.