குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
நாடாளுமன்றத்தின் புதிய கூட்ட தொடரில் ஜனாதிபதி முன்வைக்கும் கொள்கை அறிக்கை தோற்கடிக்கப்பட்டால், பிரதமர் உட்பட அமைச்சரவையை நீக்கி விட்டு, புதிய நியமனங்களை மேற்கொள்ள வாய்ப்புள்ளதாக கலாநிதி பிரதீபா மஹாநாமஹேவா தெரிவத்துள்ளார்.
ஜனாதிபதியின் கொள்கை அறிக்கை தோற்குமாயின் நாடாளுமன்றத்தையும் கலைக்க முடியும். இல்லை என்றால், புதிய பிரதமர் தலைமையில் அமைச்சரவையை நியமித்து ஜனாதிபதி அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்ல முடியும். பிரதமர் சம்பந்தமான பரிசோதனையை மேற்கொள்ள இது சிறந்த சந்தர்ப்பமாக இருக்கும். தற்போது காணப்படும் சூழ்நிலையில், ஜனாதிபதி புதிய கூட்ட தொடரில் கொள்கை அறிக்கையை முன்வைப்பார் என்ற நம்பிக்கையில்லை.
இந்த நிலையில், ஐக்கிய தேசியக்கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் காணப்படும் பிரச்சினைகள் காரணமாக அந்த கட்சிக்குள் பிரச்சினைகள் இருக்கின்றன. அரசாங்கத்தின் ஒரு பகுதியினர் எதிர்க்கட்சியில் அமர போகும் நிலையில், ஜனாதிபதி கொள்கை அறிக்கையை முன்வைத்தால், அது தொடர்பில் வாக்கெடுப்புக்கு செல்லும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன எனவும் பிரதீப மஹாநாமஹேவா குறிப்பிட்டுள்ளார்.