குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரனின் பெயர், சிகப்பு எச்சரிக்கை பட்டியலில் உள்ளடக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. மத்திய வங்கி பிணைமுறி மோசடிகள் தொடர்பில் அர்ஜூன் மகேந்திரன் மீது குற்றம் சுமத்தப்பட்டு இது தொடர்பில் சர்வதேச காவல்துறையினர் அவருக்கு எதிராக சிகப்பு எச்சரிக்கை விடுத்துள்ளதாக இலங்கை காவல்துறைத் திணைக்களம் அறிவித்திருந்தது.
எனினும், சிங்கப்பூர் பிரஜையான அர்ஜூன் மகேந்திரனின் பெயர் குறித்த பட்டியலில் இடம்பெறவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சிகப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள சிங்கப்பூர் பிரஜைகள் இணையப் பெயர் பட்டியலில் அர்ஜூன் மகேந்திரனின் பெயர் உள்ளடக்கப்படவில்லை என கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.