வன்கொடுமை வழக்கு விசாரணையின்போது எஸ்.சி., எஸ்.டி. சட்ட விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அனைத்து மாவட்ட காவல் துறை அதிகாரிகளுக்கும் டிஜிபி உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
தஞ்சாவூர் பட்டுக்கோட்டை அருகே கடந்த 2000 ஆம் ஆண்டில் ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்த 18 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு வழக்கு தொரடப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த தஞ்சாவூர் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் 2006 ஆம் ஆண்டு குறித்த நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் 5 ஆயிரம் ரூபா அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை ரத்து செய்யக்கோரி குறித்த உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்த நிலையில் இதனை விசாரித்து நீதிபதி இந்த உத்தரவனை பிறப்பட்துள்ளார்.
வன்கொடுமை சட்டத்தின் கீழ் பதிவாகும் வழக்குகளை டிஎஸ்பி அந்தஸ்துக்கு குறையாத அதிகாரி விசாரிக்க வேண்டும் எனவும் 30 நாளில் விசாரணையை முடிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும் இந்த விசாரணையை உள்துறை செயலர், சமூக நலத்துறை செயலர், டிஜிபி ஆகியோர் 3 மாதத்துக்கு ஒரு முறை ஆய்வு செய்ய வேண்டும் என சட்ட விதிகளில் கூறப்பட்டுள்ளது எனவும் இந்த வழக்கை காவல் ஆய்வாளர் விசாரித்துள்ளதனால் கீழமை நீதிமன்றம் வழங்கிய தண்டனை ரத்து செய்யப்படுகிறது எனவும் தெரிவித்துள்ளார்.
வன்கொடுமை வழக்குகளை பொறுத்தவரை எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு) சட்டம் 1989-ல் கூறபட்டுள்ள விதிகளை பின்பற்றி விசாரிக்கவும், குறிப்பாக அந்தச் சட்டத்தில் விசாரணை அதிகாரி தொடர்பான விதிகள் 6 மற்றும் 7-ஐ கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் அனைத்து மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கும் டிஜிபி உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.